ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?





ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. 
ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. 

முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. 
முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சரி இனி ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?என்று பார்ப்போம்.
தேவையானவை:

கோதுமை மாவு - 2 கிண்ண அளவு

வெள்ளை முள்ளங்கி - 2

கொத்த மல்லி - சிறிதளவு

பச்சைமிளகாய் - 2

பூண்டு - 2 பல்லு

சீரகம் - 1 தேக்கரண்டி

காரப்பொடி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !
செய்முறை:
ருசியான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
முள்ளங்கியை அலம்பித் தோல் நீக்கி அரிப்பானில் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சை மிளகாய், துருவின முள்ளங்கி, துருவிய பூண்டு, சீரகம், காரப் பொடி, உப்பு, மஞ்சள் தூள் 

அனைத்தையும் கலந்து சுடு நீர் விட்டு சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும்.

சப்பாத்திக்குச் செய்வது போல் பந்துகளாக உருட்டி, வட்டமாக சப்பாத்தி போல் இட்டு, அடுப்பை ஏற்றிக் கல்லில் போட்டுத் திருப்பி எடுக்கவும். எடுக்கும் வேளையில் எண்ணெயைத் தடவவும்.

இன்னொரு முறை (மூளி பரோட்டா ):

இம்முறையில் செய்வதை மூளிப்பரோட்டா என்றழைப்பர். இதே முறையில் முள்ளங்கி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்த மல்லி அனைத்தை யும் வதக்கி நீர் போகப் பிழிந்து உருண்டை களாக உருட்டி வைக்கவும்.

சப்பாத்தி க்குப் பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, இந்த முள்ளங்கி மசாலாவை உள்ளே பூரணமாக வைத்துப் பரோட்டா போல் இட்டு கல்லில் போட்டு எடுக்கலாம்.

இம்முறையில் முள்ளங்கி ஈரமில்லாமல் இருந்தால் தான் இட வரும், அதனால் கவனமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தால், பனீர் பட்டர் மசாலா, குருமா, கொத்ஸூ போன்றவை அருமை யான இணை உணவுகள்.

கூடுதல் குறிப்பு:
மாவைச் சுவைத்துப் பார்க்கும் போது காரம் கூடி விட்டது போல் தோன்றினால் தயிரோ எலுமிச்சைச் சாறோ சிறிதளவு சேர்க்கலாம், 
சப்பாத்தி போல் செய்யும் வேளைகளின் எண்ணெய்க்குப் பதில் வெண்ணெய் தடவினாலும் ருசி அதிகம்.
Tags: