குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப் படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும். 
குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது. பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. 

இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.  பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. 

அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  
தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. 
ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

தேவையான பொருட்கள் : 

சிக்கன் – 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப் பட்டது)

கெட்டியான தயிர் – 1 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

சிவப்பு தந்தூரி கலர் – 1/2 டீஸ்பூன்

தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 4 டேபிள் ஸ்பூன்

க்ரீம் – 1 கப்

முந்திரி – சிறிது (பேஸ்ட் செய்து கொள்ளவும்)

கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

எண்ணெய் – 1 டீஸ்பூன்

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு 
சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?
செய்முறை: 
பட்டர் சிக்கன் கிரேவி
முதலில் தயிரில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகிய வற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து விட்டு, அதில் தயிர் கலவையை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தய த்தைப் போட்டு வறுத்து, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு 

மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைத்து இறக்கி, 
அதன் மேல் கொத்த மல்லியைத் தூவி அலங்கரிக்க வேண்டும். இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி!!!

இதனை சப்பாத்தி, நாண் போன்ற வற்றிற்கு அருமையாக இருக்கும். ஒரு வேளை சாதத்திற்கு வேண்டு மெனில், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கலாம
Tags: