அனைவரும் விரும்பி சாப்பிடும் சன்னா தால் பரோட்டா செய்வது எப்படி?





அனைவரும் விரும்பி சாப்பிடும் சன்னா தால் பரோட்டா செய்வது எப்படி?

கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. 
அனைவரும் விரும்பி சாப்பிடும் சன்னா தால் பரோட்டா செய்வது எப்படி?
நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.  உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. 
இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. 

நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும். 

கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப் படுத்துகிறது. 

மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

தேவையானவை:

மைதா மாவு - 1 கிண்ணம்

கோதுமை மாவு - 1 கிண்ணம்

பால் - கால் கிண்ணம்

உப்பு - சிறிதளவு

வெண்ணெய் அல்லது உருக்கிய நெய் - 1 தேக்கரண்டி
பூரணம் செய்ய:

கடலைப் பருப்பு - 3/4 கிண்ணம்

துருவின வெங்காயம்

பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 தேக்கரண்டி

துருவின இஞ்சி - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:
சன்னா தால் பரோத்தா
மைதா மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று கலந்து உப்பு, வெண்ணெய் அல்லது நெய் போட்டுப் பிசையவும்.

15 நிமிடங்கள் மாவை ஊற விடவும். பூரணம் செய்ய, ஒரு மணி நேரம் கடலைப் பருப்பை ஊற வைக்கவும். அதிக நீரில் பருப்பை வேக விட்டுக் குழைவாக வெந்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெ யிட்டு தால் விட்டுக் கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும். துருவின வெங்காயம், துருவின இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கொத்த மல்லியைச் சன்னா தாலுடன் கலக்கவும்.ஆற விடவும்.
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
மாவை உருண்டை களாக்கி பூரணத்தை உள்ளே வைத்து மடிக்கவும். இடவும். போளிக்குச் செய்வது போல் தான்.அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக் கல்லில் இரு பக்கமும் திருப்பிச் சிவக்க எடுக்கவும். எண்ணெய் தடவிப் பரிமாறவும்.
Tags: