மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி.
இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள் கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவை தான்.
ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்...
மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய் விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவலை, சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
சரி இனி பிரெட் மீன் சுவையான செட்டிநாடு மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 7
சின்ன
வெங்காயம் – 6
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 10 இலை
புளி – சிறிதளவு
உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு மீன் துண்டுகளில் அரைத்த விழுதை தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.