உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும்.
முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதை விட வேக வைத்து உண்பதே நல்லது.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 4 பெரியது
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10
இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க :
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
பொடி வகைகள் :
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பட்டை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
பொடி வகைகள் :
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கடைசியில் உப்பு போட்டு கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம்,
தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கி பின் உருளை கிழங்கு மற்றும் பொடி வகைகளையும் போட்டு
தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கடைசியில் உப்பு போட்டு கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி.