அருமையான இஞ்சி தொக்கு செய்வது எப்படி?





அருமையான இஞ்சி தொக்கு செய்வது எப்படி?

இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி வைரல் பண்புகள் உடலின் பல பிரச்சனைகளை நீக்குகிறது. இஞ்சியில் சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஏராளமாக உள்ளன. 

அருமையான இஞ்சி தொக்கு செய்வது எப்படி?

இதைப் பயன்படுத்துவதன் மூலம் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதோடு, பருவகால நோய்களிலிருந்தும் உடல் பாதுகாக்கப் படுகிறது. 

இஞ்சியை உட்கொள்வதன் மூலம், ஆண்களின் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இதன் பயன்பாடு ஆண்களுக்கு ஏற்படும் பாலுறவு குறைபாட்டின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் உடலின் நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது. 

இஞ்சியை உட்கொள்வது ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை அதிகரிக்கிறது. இஞ்சியை உட்கொள்வது ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கிறது. 

இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. சரி இனி இஞ்சி கொண்டு அருமையான இஞ்சி தொக்கு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : .

அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம்

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம் - சிறிது

தனி மிளகாய் தூள் - 2 டேபுள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தனியா - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - சிறிது

பெருங்காயம் - சிறிது

நல்லெண்ணெய் - தாளிக்க

பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

செய்முறை : .

அருமையான இஞ்சி தொக்கு செய்வது எப்படி?

இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். 

நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கலாம். ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மழை, குளிர் காலத்திற்கு ஏற்றது. 

அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். மா இஞ்சியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

பயன் : .

பித்தம், பித்த வாய்வு சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடுகிறது.

Tags: