மாவு சத்து மிக்க ஆலு பரோட்டா செய்வது எப்படி?





மாவு சத்து மிக்க ஆலு பரோட்டா செய்வது எப்படி?

உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. 
மாவு சத்து மிக்க ஆலு பரோட்டா
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவு. மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உடலில் உற்பத்தியாகும் 

புரோட்டீன் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் !

குளுக்கோஸ் சர்க்கரை சத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், 

அதிக அளவு பிராண வாயு போன்ற காரணிகளும் மூளையின் சீரான இயக்கத்திற்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கிறது. மேற்கூறிய அனைத்து அத்தியாவசிய சத்துக்களை உருளைக்கிழங்கு கொண்டிருக்கிறது.

தேவையானவை:
கோதுமை மாவு- 2 கிண்ணம்

உருளைக்கிழங்கு- 2

சிறிய பச்சை மிளகாய்- 4

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு- கால் மூடி

கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

 ஆலூ பரோத்தா
செய்முறை:

கோதுமை மாவைச் சலித்துச் சுடு தண்ணீரில் சப்பாத்தி மாவிற்குப் பிசைவது போலப் பிசைந்து கொள்ளவும். உருளைக் கிழங்கைக் குழைவாகக் குக்கரில் வேக விட்டு மசிக்கவும்.

வெந்த உருளைக் கிழங்குடன் உப்பு, மஞ்சள் தூள், சீரகம், பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, அலம்பி பொடியாக நறுக்கிய கொத்த மல்லி ஆகியன வற்றைச் சேர்த்து மசிக்கவும்.

குழந்தை உண்பது போல மென்மையாகப் பிசிறின்றி ஆலூ அமைய வேண்டும்.

மசித்த கிழங்கை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவை இட்டு நடுவில் பூரணமாக வைத்து வட்டமாக இடவும். (உருளைக் கிழங்கும் மாவும் சமமான அளவில் இருக்க வேண்டும்).

அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக் கல்லில் இந்தப் பரோத்தாக் களைப் போட்டு, திருப்பிப் போட்டு, வெந்த பிறகு எண்ணெயைத் தடவி சிவப்பாகச் செய்து எடுத்துப் பரிமாறவும்.
தால், குருமா, கொண்டைக் கடலை மசாலா என்று சப்பாத்திக்குச் செய்யும் இணை உணவுகளையே இதற்கும் செய்யலாம்.
குழந்தை களுக்கு விருப்பமான இந்தப் பரோத்தாக் களின் காரத்தைக் கூட்டியும் குறைத்தும் அவரவர் விருப்பத்திற் கேற்பச் செய்து கொள்ளலாம்.
Tags: