வைட்டமின் ஏ சத்து நிறைந்த கோஸ் பரோத்தா செய்வது எப்படி?





வைட்டமின் ஏ சத்து நிறைந்த கோஸ் பரோத்தா செய்வது எப்படி?

முட்டைகோஸில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. 
வைட்டமின் ஏ சத்து நிறைந்த கோஸ் பரோத்தா செய்வது எப்படி?
முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

சரி இனி வைட்டமின் ஏ சத்து நிறைந்த கோஸ் பரோத்தா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை;
கோதுமை மாவு- 1 1/2 கிண்ணம்

துருவின முட்டைக்கோஸ்- 1 கிண்ணம்

பச்சைமிளகாய்- 1

சீரகம்- 1 தேக்கரண்டி

காரப்பொடி- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி- சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:
வைட்டமின் ஏ சத்து நிறைந்த கோஸ் பரோத்தா செய்வது எப்படி?
கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் துருவின கோஸூடன் சீரகம், பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், 

காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்த மல்லியைச் சேர்த்து ஈரம் ஓரளவிற்குப் போக வதக்க வேண்டும்.

பிறகு பூரணத்தைச் (ஈரம் போகப் பிழிந்து) சப்பாத்தி மாவு உருண்டைக்குள் வைத்துப் பரோத்தாக் களாக இடவும். சப்பாத்திக் கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி வெந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும்.

தால், குருமா, கொத்ஸூ வகைகள் இணை உணவுகள்.

கூடுதல் குறிப்புகள்:
1. கோஸில் பொரியல், கூட்டு என்று செய்திருப்போம், இது வித்தியாச மான ருசியான சிற்றுண்டி.
2. மேற்கூறிய முறையிலேயே பூரணமாகச் செய்யாமல் கோதுமை மாவுடன் மேலே குறிப்பிட்ட வற்றை ஒன்றாகக் கலந்தும் சப்பாத்தி போலச் செய்யலாம்.

3. வித்தியாச விரும்பி களுக்கும் ஒரே மாதிரி சிற்றுண்டி செய்து அலுத்தவர் களுக்கும் இது மாறுபட்ட வகை.
Tags: