முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள்,
நீடித்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப் படுவது கோழிக்கறி.
மேற்கூறிய நன்மைகளுக் கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன.
சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியில் 21 கிராம் புரதம், 4 கிராம் கொழுப்பும் தான் இருக்கிறது.
கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும். அந்த அடிப்படையில் நாட்டுக்கோழி தான் சிறந்தது.
தேவையான பொருட்கள்:
நாட்டு கோழி – ½ கிலோ
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்த மல்லி இலை – சிறிது
தாளிக்க:
பட்டை – 2
சோம்பு – ½ தேக்கரண்டி
சோம்பு – ½ தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் – 1 கோப்பை
சோம்பு – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
செய்முறை:
அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் வைத்துக் கொள்ள வேண்டும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி
பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விடவும். பின் நறுக்கிய
வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதையும்
சேர்த்து வதக்கி பின் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், அரைத்த மசாலா
மற்றும் தேவையான உப்பு எல்லா வற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
வெந்தவுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி
தெரக்கல் தயார்.