நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை நம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஓட்ஸ் நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கிய மானதாகவும் இருக்கும் ஓட்ஸை பலரும் தங்கள் காலை நேர தாயத்தில் சேர்த்து கொள்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஓட்ஸ் சாப்பிடுவது நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுவது.
ஓட்ஸில் ஃபைபர் சத்து நிறைந்துள்ளதால் இதனை டயட்டில் சேர்த்து கொள்ளும் ஒருவருக்கு வயிறு முழுமை அடைந்த உணர்வு மற்றும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.
வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
இதன் மூலம் தங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களின் ஒட்டு மொத்த கலோரி நுகர்வு குறையும். இது எடை இழப்பிற்கு கணிசமாக உதவும்.
தவிர ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், செரிமான அமைப்பு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது என்கிறார் தீபாலி ஷர்மா.
தொடர்ந்து ஓட்ஸின் நன்மைகள் பற்றி பேசிய நிபுணர் தீபாலி, ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் உள்ளிட்டவை மெதுவாக ஜீரணமாகும் என்பதால், ரத்த ஓட்டத்தில் சர்க்கரை படிப்படியாக வெளியிடப்படும்.
இதனால் ஓட்ஸ் எடுத்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். சரி இனி அருமையான ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 2 கிண்ணம்
தயிர் – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
துருவிய கேரட்- 1 கிண்ணம்
கொத்தமல்லி
செய்முறை:
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு,
பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில்
போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார். தொட்டுக் கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப் பொடி அருமையாக இருக்கும்.
பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.
விசேஷ உடல் அமைப்பை கொண்ட சில உயிரினங்கள் !பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.
பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார். தொட்டுக் கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப் பொடி அருமையாக இருக்கும்.