அருமையான பட்டாணி குருமா செய்வது எப்படி? #Kuruma





அருமையான பட்டாணி குருமா செய்வது எப்படி? #Kuruma

அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. 
அருமையான பட்டாணி குருமா செய்வது எப்படி?
அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை  பட்டாணி இருக்கிறது. மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். 

அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை  பட்டாணியில் 'வைட்டமின் கே' சத்து அதிகம் நிறைந்துள்ளது. 
இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயது ஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். 

இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப் போகிறது.
தேவையான பொருட்கள் : 

பட்டாணி – 200கிராம்

பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

தக்காளி – 2

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 சிறிய துண்டு

இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பச்சை மிளகாய் – 5 (காரத்திற்கு ஏற்ப)
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

சோம்பு பட்டை கல்பாசி கிராம்பு அரைக்க : 

தேங்காய் – 1 மூடி

கசகசா – சிறிதளவு

கிராம்பு – 2

சோம்பு பொடி வகைகள் : 

மிளகாய் பொடி -3 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
செய்முறை : 
அருமையான பட்டாணி குருமா செய்வது எப்படி?
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கவும். பின் சமைக்கும் முன் 3 தடவை நன்றாக கழுவவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள வைகளை போட்டு தாளித்து பின் பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி ஆகிய வற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் பட்டாணி மற்றும் பொடி வகைகளை போட்டு

தண்ணீர் பட்டாணியை விட 3 பங்கு ஊற்றி உப்பையும் போட்டு கலக்கி மூடி வைத்து 2 அல்லது 3 விசில் வர விட்டு இறக்கி பின் சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பச்சை வாசம் போன பின் அரைத்து வைத்த தேங்காய், கசகசா, சோம்பு, கிராம்பு கலவையை ஊற்றி பின் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
சுவையான பட்டாணி குருமா ரெடி. இதனை சப்பாத்தி, பிரைடு ரைஸ், பரோட்டா, இட்லி, தோசை, சாதம் போன்ற பலவற்றிற்கு சைடிஷாக வைக்கலாம்.
Tags: