நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்கு படுத்தப்படும்.
தானிய வகையைச் சேர்ந்த கருப்பு உளுந்து உங்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை நிவர்த்தி செய்யவும் உதவும் மூலப்பொருட்கள் கருப்பு உளுந்தில் உள்ளன.
அது மட்டுமின்றி, வயிற்றுப் போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. மேலும், கருப்பு உளுந்து உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கவும் உதவுகிறது.
இதன் மூலம் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும், கருப்பு உளுந்தின் மூலம் எலும்புகளின் தாது அடர்த்தி அதிகரிக்கும். இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்சனைகளை தடுக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
உளுந்து – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி
கடுகு – சிறிது
சோம்பு – சிறிது
சோம்பு – சிறிது
பட்டை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
சட்டியில் எண்ணெய் ஊற்றாமல் உளுந்தை
பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு,
பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்
மற்றும் நறுக்கிய
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளக்காய்ப் பொடியை
சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த உடன் இறக்கி
விடவும்.
இதனுடன் கலந்து வைத்த கலவையை சேர்க்கவும். சுவையான உளுந்தஞ் சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்றவை.