சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?





சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?

சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். 
சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?
ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கை யாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை 
மசாலாவில் ஊற வைத்து skewer யில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். 

சிக்கன் டிக்கா இந்திய துணை கண்டத்தில் உதயம் ஆனதாக கூறப்படுகிறது. எனினும் இவை வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானிலும் மிகவும் பிரபலமான உணவாக இருக்கிறது. 

ஆப்கானிஸ்தானில் இதை வெவ்வேறு பொருட்களை கொண்டு வித்தியாச வித்தியாசமான உணவாக செய்து உண்கிறார்கள். 
சிக்கனுக்கு பதிலாக இதில் மட்டன், பீஃப், மற்றும் போர்க்குகலும் சில நாடுகள் பயன்படுத்துகிறார்கள். இதனின் சிறப்பு என்னவென்றால் இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். 
சிக்கனை ஊற வைப்பதற்கு தேவையான மசாலாவை செய்து சிக்கனை அதில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும் இதை வெகு எளிதாக ஒரு pan ல் வைத்தே வேக வைத்து விடலாம். 

மேலும் சிக்கன் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

சரி இப்பொழுது சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி? என்று காண்போம்.
தேவையான பொருட்கள்: 

கோழிக்கறி – அரைக் கிலோ (எலும்பில்லாதது)

மிளகு – 15

பச்சை மிளகாய் – 3

பெரிய வெங்காயம் – 4

இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு

பூண்டு – 6 பல்

குடை மிளகாய் – ஒன்று

தயிர் – ஒரு கப்

ப்ரஷ் க்ரீம் – 3 மேசைக்கரண்டி

கார்ன்ஸ்டார்ச் – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்)

கரம் மசாலாத்தூள் – அரைத் தேக்கரண்டி

ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

வெண்ணெய் – சிறிது

உப்பு – தேவையான அளவு
செய்முறை: 
சுவையான சிக்கன் டிக்கா செய்வது எப்படி?
கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில்லாமல் சற்று உலர   விடவும். 
மிளகினை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை காம்பு நீக்கின பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும். 
குடை மிளகாயை கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தயிரினை ஒரு மெல்லியத் துணியில் கட்டித் தொங்க விட்டு, நீர் எல்லா வற்றையும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப்ரஷ் க்ரீம், கார்ன்ஸ்டார்ச், முட்டையின் வெள்ளைக்கரு, நறுக்கின குடை மிளகாய் துண்டுகள், மிளகுத் தூள், ஏலப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து, ஒன்றாய் கலக்கவும்.
பிறகு அதில் கோழித் துண்டங் களைப் போட்டு நன்கு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊற விடவும்.
ஒரு சொருகு கம்பியில் கோழித் துண்டங்கள், குடைமிளகாய் துண்டங்கள் என மாற்றி மாற்றி சொருகி, தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும்
Tags: