உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும்.
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவை யுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது.
பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும் கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி.
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை! என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின் போது கைகொடுத்து உதவுவது.
வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா.
தேவையானவை:
இட்லிகள் - 10
இட்லி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகை வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெரிய வெங்காயம் - 1
இட்லிகள் - 10
இட்லி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகை வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
1. காலையில் செய்து மீந்த இட்லி களையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளை யோப் பயன் படுத்தலாம்.
2. தாளிசப் பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப் பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக
இவ்வகை யில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு
கிடு கிடுவென வியாபாரம் ஆகி விடும்.
குறிப்பு :
இட்லிக்கு அரிசி ஊறவைக்கும்போது, இந்த 2 டிப்ஸ்களையும் மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க.. இட்லி, தோசை புஸ்புஸ்ஸுனு வரும்.
இதோ குட்டி டிப்ஸ். இட்லிக்கு மாவு அரைக்கும் போது அரிசிக்கு பதிலாக சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தலாம். கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து இட்லிக்கு மாவு அரைக்கலாம்.
பாசிப்பருப்பு சேர்த்து அரைத்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த பாசி பருப்பினை தவற விடக்கூடாது.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது, சாதாரண உளுந்துக்கு பதில், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.
இட்லி மென்மையாக வர வேண்டுமானால், மாவு அரைக்கும் பக்குவம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இட்லிக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விடக்கூடாது.
அதே போல மாவு கெட்டியாகி விடக்கூடாது. அதே போல உளுந்து அதிகமாகி விடவும் கூடாது, குறைவாகி விடவும் கூடாது, இதனால், இட்லி கெட்டியாகி விடும்.