தேவையானவை:
கடலைமாவு- 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – சிறிதளவு
உலர்திராட்சை – சிறிதளவு
எண்ணை – பூந்தி செய்ய
ஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி
செய்முறை:
1.கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
3.எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப்
பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப்
பொரித்தெடுக்கவும்.
4.மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து
பாகு காய்ச்சவும். ( ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல்
வரவேண்டும்)
5.நெய்யில் முந்திரி, உலர்திராட்சை யைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.
6.பூந்தியைப் பாகுடன்(சூடாக இருக்கும் போதே) ஒன்று சேர்க்கவும்.
7.கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.
பின்குறிப்புகள்:
1. புதிதாக இனிப்பு வகைகள் முயற்சிப்பவர்கள் சிறிதளவு செய்து
பார்த்து பதம், பக்குவம் புரிந்து கொண்டு அடுத்த முறை அதிக அளவில் செய்து
பார்க்கலாம்.
2. பூந்திக் கரண்டி கண்ணளவு சிறிதாக இருத்தல் நல்லது.
3. சில நேரங்களில் இவ்வகை இனிப்புகள் செய்யும் போது தோல்வியைச் சந்தித்தால் துவளக் கூடாது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கவும்.
4. லட்டுகள் நன்றாக அமைந்து விட்டால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’
என்று குடும்பத்தினரைக் கூவி அழைத்து லட்டுகளை விளம்பரப்படுத்தலாம், லட்டு
பிடிக்க வரவில்லையா? பூந்தி செய்தேன் என்று மழுப்பி விடலாம்.