மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள். ஆட்டுக் கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.
உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது.
அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், போட்டியை சமைத்து சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும்.
எனவே, கறியை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆட்டுக்கறியின் ஒவ்வொரு உடல் பாகத்தையும் சாப்பிடும் போது, ஆரோக்கியம் கூடும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது.
பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும் போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
பைபாஸ் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டிய சில வழிகள் !
சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள். சரி இனி ஆட்டு இறைச்சி பயன்படுத்தி அருமையான மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்:
கறி – 500 கிராம்
பச்சைமிளகாய் – இரண்டு
தனியாதூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
கரம்
மசாலா தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும்.
பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும்.
ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !
ஒரு நான் ஸ்டிக் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.