புரதம் மிக்க மட்டன் கட்லெட் செய்வது எப்படி?





புரதம் மிக்க மட்டன் கட்லெட் செய்வது எப்படி?

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. 
புரதம் மிக்க மட்டன் கட்லெட்
இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.  காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு மட்டன் சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். 

சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கு எளிமையானவையும் கூட. இதில் இன்று மட்டன் கட்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 
ஆட்டுக்கறி: ஒரு கிலோ

கரம் மசாலா: 2 தேக்கரண்டி

தனியா தூள் 2 தேக்கரண்டி

நெய்: 200 கிராம்

சுக்கு: 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்: 2

பெருங்காயத் தூள்: ஒரு சிட்டிகை

இஞ்சி: சிறுதுண்டு

கொத்துமல்லி: ஒரு கட்டு

உருளைக்கிழங்கு: 14

பச்சை மிளகாய்: 2

உப்பு: தேவையான அளவு

ரொட்டித் தூள்: தேவையான அளவு

செய்முறை: 
வாணலியில் 50 கிராம் நெய் விட்டு, அது காய்ந்ததும் உருளைக் கிழங்கு, ரொட்டித் தூள் தவிர 

ஏனைய பொருள்களை எல்லாம் வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேக வைத்து இறக்க வேண்டும்.

உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து, அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.

இதை சிறுசிறு உருண்டை களாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்க வேண்டும்.

வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
Tags: