பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?





பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு பனீர் புரதத்தின் நல்ல மூலமாகும். உடலின் சரியான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. 
பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?
மேலும், மற்ற பாலாடைக் கட்டிகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு ஆரோக்கியமான விருப்பம் மற்றும் தொடர்ந்து உட்கொள்ளலாம். பனீர் என்பது குறைந்த கார்ப் மற்றும் அதிக புரதம் கொண்ட உணவாகும். 

இது உடல் எடையை குறைக்க உதவும். இது உங்களை நீண்ட காலத்துக்கு நிரம்பியதாக உணர வைப்பதோடு, ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் மீதான பசியையும் குறைக்கிறது. 
இருப்பினும், பனீர் இன்னும் குறைந்த கலோரி உணவு அல்ல, எனவே அதை மனதில் வைத்து அதை உட்கொள்ள வேண்டும். பனீரில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. 

ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கவும் இது உதவுகிறது. உங்கள் இரத்த சர்க்கரையை சிறப்பாக நிர்வகிக்க, நீங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும் மற்றும் அதற்கேற்ப உங்கள் உணவை மாற்ற வேண்டும்.

நல்ல எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசும் போது, கால்சியம் பற்றி நாம் நினைக்கிறோம். எலும்புகள், பற்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வளமான மூலமாக பனீர் உள்ளது. 
உங்கள் உணவில் மற்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

பனீர் – கால் கிலோ

பச்சை பட்டாணி – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 200 கிராம்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

இஞ்சி – 2 விழுது

பூண்டு – 2 விழுது

சீரகம் – அரை தேக்கரண்டி

மல்லித்தழை – கால் கட்டு

வெண்ணெய் – 100 கிராம்

எண்ணெய் – ஒரு குழி கரண்டி

மல்லி தூள் – 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

முந்திரி – 100 கிராம்


முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதோடு மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பனீர், பச்சை பட்டாணி எல்லா த்தையும் போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும்.

இத்துடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இறக்கும் பொழுது பட்டர், முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்.

பனீர் தயார் செய்யும் முறை:
பாலை அடுப்பில் வைத்து பொங்கும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பால் திரிந்து வரும். அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி அதை ஒரு தட்டின் மீது துணியோடு வைத்து
அப்படி என்ன தான் இருக்கிறது நிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?
அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தினால் சமமாக வரும். இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் பிரிட்ஜில் இருக்க வேண்டும்.

பின்னர் அதை வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
Tags: