டேஸ்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?





டேஸ்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோ குளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
டேஸ்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும்.  இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. 

பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும். சரி இனி இறால் பயன்படுத்தி டேஸ்டியான இறால் குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள்: 

இறால் – அரை கிலோ சி.

வெங்காயம் – ஐம்பது கிராம்

பூண்டு – மூன்று பல்

தக்காளி – மூன்று

எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு டீ ஸ்பூன்

பட்டை – சிறிதளவு

கறிவேப்பிலை – மூன்று கொத்து

மிளகாய்த் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

தேங்காய் பால் – தேவையான அளவு

சீரகம் – கால் டீ ஸ்பூன்

செய்முறை:
டேஸ்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்க வேண்டும். தேங்காய், சீரகத்தை அரைக்க வேண்டும். சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்க வேண்டும்.

இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
Tags: