டேஸ்டியான ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்வது எப்படி?





டேஸ்டியான ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

2 minute read
இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. 
டேஸ்டியான ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று? நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். 

ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 

ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. 
அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. 
அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சரி இனி சிக்கன் பயன்படுத்தி டேஸ்டியான ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்: 

கோழி – 1 கிலோ

உலர்ந்த மிளகாய் – 13

பூண்டு – 5 பல்லு

இஞ்சி – அரை அங்குலம்

மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை

சீரகம் – அரை தேக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

மிளகு – 6 தேக்கரண்டி

பட்டை – ஒரு அங்குலம்

பிரிஞ்சி இலை சிறிதளவு

கறிவேப்பிலை சிறிதளவு

தேங்காய்ப்பால் – அரை கப்

சின்ன வெங்காயம் – 20

நெய் – 3 மேசைக்கரண்டி

எலுமிச்சம்பழச்சாறு ஒரு மேசைக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்பி
ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்வது
செய்முறை: 

கோழி இறைச்சியைக் கழுவி ஓரளவு நடுத்தரத் துண்டங் களாக்கிக் கொள்ள வேண்டும். வர மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு ஆகிய வற்றை வறுத்து போடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திர த்தில் இறைச்சி, பொடி செய்த பொருட்கள், சிறிதாக அரிந்த இஞ்சி, பூண்டு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி,

இரண்டாவதாக பிழிந்த தேங்காய்ப் பால் ஆகிய வற்றோடு சுவைக்கேற்ப எலுமிச்சை பழச்சாறு, உப்பு ஆகிய வற்றையும் போட்டு மூடி நன்றாக வேக விட வேண்டும்.
கோழி நன்றாக வெந்ததும் முதலில் எடுத்த கெட்டி தேங்காய் பாலையும் ஊற்றி மேலும் 10 நிமிட ங்களுக்கு வேக விட வேண்டும்.

இறைச்சிக் குழம்பை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வெறும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாகச் சூடானதும் அரிந்த வெங்காயத்தை இட்டு பொன்னிற மாகப் பொரிக்க வேண்டும்.
பின்னர் இதனுள் எடுத்து வைத்த இறைச்சியை மட்டும் (குழம்பு இல்லாமல்) கொட்டிக் குறைந்த வெப்பத்தில் மேலும் பத்து நிமிடங் களுக்கு வேக விட வேண்டும்.

பின்னர் குழம்பைக் கொட்டிக் குழம்பானது ஓரளவு கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.
Tags:
Random Posts Blogger Widget
Today | 5, April 2025