நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற நட்ஸ் வகைகளில் நாம் பெரிதும் விரும்பக் கூடியது முந்திரிப் பருப்புகள் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பருப்புகளை பலர் ஸ்நாக்ஸ் போல நேரடியாகவே சாப்பிடுகின்றனர்.
இன்னும் சிலர், இனிப்புகள், இதர சமையல்களில் முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்கின்றனர். தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது.
முந்திரி பருப்புகளை வாங்கும் போது அதன் நிறம் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். முந்திரியின் நிறம் கொஞ்சம் மஞ்சளாக இருந்தால் அது போலியாகும்.
அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் அது ஒரிஜினல் என்று நம்பலாம். முந்திரியின் மீது கரும்புள்ளிகள், துளைகள் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும்.
சில சமயம் கெட்டுப் போன பருப்புகளை விற்பனை செய்ய பார்ப்பார்கள். முந்திரி நல்ல வாசம் மிகுந்தது. அதே சமயம், நாம் நுகரும் போது ஆசையை தூண்டுவதாக அமையும்.
அதுவே தரமற்ற முந்திரி பருப்புகளை நுகர்ந்து பார்த்தால் மோசமான வாசம் தென்படலாம். முந்திரி பருப்புகளை சாப்பிடும்போது அது நம் வாயில் ஒட்டாது.
அதுவே போலியான பருப்புகளை சாப்பிடும் போது அது நம் வாயில் பற்களில் ஒட்டிக் கொள்ளும்.சிக்கன் கிரேவியில் பல வெரை ட்டிகள் உள்ளது.
அதில் ஒன்று தான் முந்திரி சிக்கன் கிரேவி. இந்த முந்திரி சிக்கன் கிரேவியை செட்டிநாடு ஸ்டைலில்
எப்படி செய்வ தென்று இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.
இது சாதத்துடன் சாப்பிட்ட
சுவையாக இருக்கும்.
மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்ற
சமையலும் கூட.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி
கொத்த மல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவை யான அளவு
அரைப்பதற்கு...
முந்திரி - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
புதினா - சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு,
கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மை யாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பே ஸ்ட்,
எலுமிச்சை சாறு, தேவை யான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள்
தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த தும்,
வெங்காய த்தை சேர்த்து பொன்னிற மாக வதக்கி, பின் அதில் ஊற வைத் துள்ள சிக்கனை
சேர்த்து,
வேண்டு மெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
வேண்டு மெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்த மல்லியைத் தூவி இறக்கி னால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!