சுவையான கோவைக்காய் ப்ரை செய்வது எப்படி? #friedrice





சுவையான கோவைக்காய் ப்ரை செய்வது எப்படி? #friedrice

0
உடல் பருமனைக் குறைக்க உதவும் கோவைக்காயின் வேரில் இத்தகைய பண்புகள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரி செய்கிறது. 
கோவைக்காய் ப்ரை
செரிமான செயல்முறை நன்றாக இருக்கும் போது, ​​உடல் பருமன் படிப்படியாக குறையத் தொடங்கும். உடலில் இரும்புச் சத்து குறைவதால், நம் உடல் விரைவில் சோர்வடைந்து போவது தெரியும். 

சோர்வுக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதுடன், உடலில் சோர்வு பிரச்சனையும் நீக்க உதவும். 

இதனுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். கோவைக்காய் உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கிறது, ஏனெனில் இது தியாமின் கார்போ ஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது.
கோவைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் பைல்ஸ், இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்கள் விலகும். செரிமான அமைப்பிலும் நிறைய முன்னேற்றம் ஏற்படும். 

குடல் அசைவு பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.   பலருக்கும் கோவைக்காய் பிடிக்காது. இதற்கு காரணம் அதனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பது தான். 

ஆனால் உண்மையில் கோவைக்காய் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு முறை சமைத்து சாப்பிட்டால், அடிக்கடி சமைத்து சாப்பிடத் தோன்றும். 

அதிலும் கோவைக்காயை சிம்பிளாக ப்ரை செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இந்த கோவைக்காய் ப்ரை, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்: 

கோவைக்காய் - 250 கிராம்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கள்ளக்காதல் ஜோடியின் விபரீத ஆசை திகைத்து போன காவல்துறை !
செய்முறை: 

முதலில் கோவைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, பின் அவற்றை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின் அதில் கோவைக்காயை சேர்த்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 

மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் கோவைக்காய் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் தீயை குறைத்து, 15-18 நிமிடம் கோவைக்காய் ஓரளவு மொறு மொறு வென்று வரும் வரை வறுத்து, 

பின் அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கோவைக்காய் ப்ரை ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)