சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் செய்வது எப்படி? #friedrice





சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் செய்வது எப்படி? #friedrice

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
  
சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் செய்வது எப்படி?
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
இதுவரை எத்தனையோ கபாப் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளை க்கிழங்கு கைமா கபாப் சுவைத்ததுண்டா? இது மிகவும் அற்புதமான கபாப்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இது சிறந்த சைடு டிஷ் மட்டுமின்றி, மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்
தேவையான பொருட்கள்: 

மட்டன் கைமா - 1/4 கிலோ

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பிரட் துண்டு - 2

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டை - 2

பிரட் தூள் - 1 கப்

எண்ணெய் - 2 கப்
17 ஆண்டு மறைந்து இருந்த குற்றவாளி காட்டி கொடுத்த ட்ரோன் !
செய்முறை: 
சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் செய்வது எப்படி?
முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதப்பி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.

பின் அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அதற்குள் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?
பின்னர் மசித்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கில் சிறிது எடுத்து உருண்டை யாக்கி, தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து,

பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் மீதமுள்ள மசித்த உருளைக் கிழங்கை செய்தால், உருளைக் கிழங்கு கைமா கபாப் ரெடி!
Tags: