உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும்.
உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
இதுவரை உருளைக்கிழங்கைக் கொண்டு குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என்று சுவைத்திருப்பீர்கள்.ஆனால் உருளைக் கிழங்கை தயிருடன் சேர்த்து கிரேவி செய்து சுவைத்த துண்டா?
இல்லை யெனில், அதனை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
கடலை மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் கடலை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளறி விட வேண்டும்.
பின் அதில் தயிர் கலவையை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கலவை யானது எண்ணெயில் இருந்து பிரியும் போது, அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் கொத்த மல்லியைத் தூவி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!