உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும்.
முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மதிய வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சூப்பரான ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். ஏனெனில் அந்த அளவில் இதனை செய்து முறை மிகவும் எளிதாக இருக்கும்.
அப்படி எளிதாக செய்யக்கூடிய ரெசிபி என்னவென்று கேட்கிறீர்களா? அது தான் மசித்த உருளைக்கிழங்கு மசாலா.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்ணெய் சேர்த்து உருக வைக்க வேண்டும்.
பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னியமாக வதக்க வேண்டும்.
பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!