சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை செய்வது எப்படி? #friedrice





சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை செய்வது எப்படி? #friedrice

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. சேப்பங்கிழங்கின் முழு செடியும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. 
சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை செய்வது எப்படி?
சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு  என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கிழங்கின் செடி மெல்லிய தண்டினையும் அடியில் கிழங்குகளையும் கொண்டிருக்கும். 

இதன் கிழங்கு மட்டுமல்ல தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்துச் சாப்பிடலாம். புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடக்கூடாது. 

புளிக்குழம்பு வைப்பவர்கள் இந்த தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இலையில் டோக்ளா செய்து சாப்பிட சுவையாக இருக்கும். 
சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். 

எப்போதும் உருளைக்கிழங்கு ப்ரை செய்து போர் அடித்து விட்டதா? அப்படி யெனில் சற்று வித்தியாசமாக சேப்பங்கிழங்கு கொண்டு ப்ரை செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிடுங்கள்.

மேலும் சேப்பங்கிழங்கில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.  இத னால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்: 

சேப்பங்கிழங்கு - 10

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்சள்

தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
செய்முறை: 
முதலில் சேப்பங்கிழங்கை நீரில் மண் முழுவதும் நீங்க நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சேப்பங் கிழங்கை போட்டு, 

மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கி, தோலுரித்து, துண்டு களாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
பின்பு அதில் உப்பு தூவி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்த மல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி!
Tags: