ஃப்ரைடு சிக்கன் எனச் சொல்லப்படும் கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் கேஎஃப்சி சிக்கன் முதலிடத்தில் உள்ளது.
பர்த்டே பார்ட்டி தொடங்கி கெட் டூ கெதர் வரை கேஎஃப்சி சிக்கன் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவ தில்லை. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கேஎஃப்சி சிக்கன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப் படுகின்றன.
விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் கேஎஃப்சி சிக்கன்கள் தேவைப் படுக்கின்றன.
பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர் களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஊற வைக்க:
எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ)
லெக் பீஸ் – ஒரு கிலோ
வெங்காயம் – ஒன்று (பெரியது) தக்காளி- ஒன்று (பெரியது)
இஞ்சி – மூன்று அங்குல துண்டு
பூண்டு – ஆறு பல்
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
டிப் செய்து பொரிக்க:
மைதா – ஒரு கப்
கார்ன் ப்ளார் – கால் கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் + பட்டர் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். டிப் செய்ய கொடு த்துள்ள பொருட் களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும். மொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி.
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும். மொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி.