அசத்தலான ப்ராக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி? #friedrice





அசத்தலான ப்ராக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி? #friedrice

0
பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.
அசத்தலான ப்ராக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி?
அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும். ஒரு ஆரோக்கியமான டயட்டுக்குத் தேவையான காய்கறி எது என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் ப்ராக்கோலியைச் சுட்டிக் காட்டலாம்.

ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.
பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது; அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. 

எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே!

காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது.

அத்தகையவர் களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. 

தேவையான பொருட்கள்: 

ப்ராக்கோலி - 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப் பட்டது) 

உப்பு - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

ப்ரை செய்வதற்கு... 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - சிறிது 

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 
ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !
செய்முறை: 
அசத்தலான ப்ராக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ராக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்ப அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)