கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும். தினை அரிசியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
இதனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
இதனை உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும் பொழுது ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.
தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.
இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்தி ருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்த துண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.
ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தினை - 1/2 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 4 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெல்லத்தை 1/4 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து பாகு போன்று செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தினையை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து, ஊறிய தினையை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவானது ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்.
வாயை திறந்து கொண்டு தூங்குவதால் இந்த பிரச்சனை ஏற்படும் தெரியுமா?
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், குழிகளில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தித்திக்கும் தினை பணியாரம் ரெடி!