தீபாவளி லேகியம் செய்வது எப்படி?





தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

தீபாவளி லேகியம் என்பது வயிறு கோளாறுகளை சரி செய்ய உதவக் கூடியது. இதை ஏன் தீபாவளி அன்று சாப்பிட வேண்டும் என்பதற்கு இரு காரணங்கள் சொல்லப் படுகின்றன. 
தீபாவளி லேகியம் செய்வது எப்படி?
ஒன்று தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட் வகைகள், உணவு என நிறைய சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று மந்தம் உண்டாகலாம்.

சாதாரணமாக தீபாவளி லேகியம் செய்யும் முறை நிறைய நாட்டு மருந்துகள் சேர்த்து சற்று செய்வதற்கு சிரமமாக இருக்கும். இம்முறை சுலபமாகவும், ருசியாகவும் எபக்டிவாகவும் இருக்கும்.

நிறைய பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு உப்புசம், அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கை மருந்து இது. 
தேவையான பொருட்கள்  :

இஞ்சி (இளசு) – 250 கிராம் 

வெல்லம் – 1/2 கப் 

தேன் – 1/4 கப் 

நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் பொடி – சிறிதளவு 

தனியா பொடி – 2 டீஸ்பூன் 

சீரகப்பொடி – 1 டீஸ்பூன் 

செய்முறை :
இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். 
வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு திரும்பவும் காய்ச்ச வேண்டும்.

நன்றாக நுரைத்து கம்பி பதத்திற்கு வரும் பொழுது அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து மிதமான தீயில், கைவிடாது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

2 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து கிளறவும். 6, 7 நிமிடங்கள் கிளறியபின் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வரும். அந்த சமயத்தில் நெய் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும். 
நன்றாக ஆறியப் பிறகு தேன் சேர்த்து நன்றாக கிளறி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். கைப்படாமல் இருந்தால் எளிதில் கெடாது.
Tags: