புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப் போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.
காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி இனி சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி?என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக் கிழங்கு - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2 இன்ச்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குடல் புழுவை வெங்காயத்தை வைத்து எப்படி வெளியேற்றலாம்?
அரைப்பதற்கு...
புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் புதினா, தேங்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
17 ஆண்டு மறைந்து இருந்த குற்றவாளி காட்டி கொடுத்த ட்ரோன் !
இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!