டேஸ்டியான கேரட் சீஸ் சப்பாத்தி செய்வது எப்படி?





டேஸ்டியான கேரட் சீஸ் சப்பாத்தி செய்வது எப்படி?

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். 
டேஸ்டியான கேரட் சீஸ் சப்பாத்தி செய்முறை !
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். 

வயிற்றுப்  போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக்  குடிக்கலாம், விரைவில் குணமடையும்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. 

பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும்  செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம். இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. 

கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது  நல்லது. 
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை  பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும். 

விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம்.

நுண்ணோக்கியின், தொலைநோக்கியும் தெரிந்து கொள்ள !

உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட் சீஸ் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள். இது ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். வேண்டுமானால் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 1 கப் 

கேரட் - 2 (துருவியது) 

சீஸ் - 1/4 கப் (துருவியது) 

சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 

சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய்/நெய் - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைய வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-5 நிமிடம் கிளறி விட வேண்டும். 

பின் ஒரு பௌலில் அந்த கேரட்டை சேர்த்து, அத்துடன் துருவிய சீஸ், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போன்று லேசாக தேய்த்து, அதன் நடுவே சிறிது கேரட் கலவையை வைத்து, மடித்து, 
மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்க்க வேண்டும். 

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய்/நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் சீஸ் சப்பாத்தி ரெடி!
Tags: