நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை நம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஓட்ஸ் நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கிய மானதாகவும் இருக்கும் ஓட்ஸை பலரும் தங்கள் காலை நேர தாயத்தில் சேர்த்து கொள்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஓட்ஸ் சாப்பிடுவது நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுவது.
ஓட்ஸில் ஃபைபர் சத்து நிறைந்துள்ளதால் இதனை டயட்டில் சேர்த்து கொள்ளும் ஒருவருக்கு வயிறு முழுமை அடைந்த உணர்வு மற்றும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் தங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களின் ஒட்டு மொத்த கலோரி நுகர்வு குறையும். இது எடை இழப்பிற்கு கணிசமாக உதவும்.
தவிர ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், செரிமான அமைப்பு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது என்கிறார் தீபாலி ஷர்மா.
தொடர்ந்து ஓட்ஸின் நன்மைகள் பற்றி பேசிய நிபுணர் தீபாலி, ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் உள்ளிட்டவை மெதுவாக ஜீரணமாகும் என்பதால், ரத்த ஓட்டத்தில் சர்க்கரை படிப்படியாக வெளியிடப்படும்.
இதனால் ஓட்ஸ் எடுத்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். சத்தான ஓட்ஸில் கஞ்சி மட்டுமே குடித்து அலுத்துப் போனவரா நீங்கள்? இதோ ஓட்ஸில் சுவையான பிரியாணி, சூடான சப்பாத்தி செய்ய எளிமையான குறிப்புகள். செய்து பாருங்கள்!
நுண்ணோக்கியின், தொலைநோக்கியும் தெரிந்து கொள்ள !
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 250 கிராம்
கோதுமை மாவு – 250 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – சிறிதளவு
வெந்தயக் கீரை அல்லது கடைகளில் கிடைக்கும் மேத்தி இலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஓட்ஸ்ஸை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த ஓட்ஸுடன் கோதுமை மாவு, மஞ்சள் தூள்,
அரிந்த வெந்தயக் கீரை மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை 2 மணிநேரம் ஊறவைத்து, பின்னர் சப்பாத்திகளாக தேய்த்து சுட்டெடுக்கவும்.
பெண்களை மயக்கும் வாசனை திரவியம் வெளிவரும் சீக்ரெட் !
ஓட்ஸ், கோதுமை, வெந்தயக் கீரை சேர்ந்த இந்த சப்பாத்தி மிகவும் சுவையாக இருக்கும். எந்தவிதமான குருமாவுடனும் இந்த சப்பாத்தி காம்பினேஷன் அருமையாக இருக்கும்.