பொதுவாக நட்ஸ் என அழைக்கப்படும் விதை வகையை சேர்ந்த முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும், பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும்.
எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது. முந்திரியை அதிகமாக உண்ணும் போது அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என கூறப்படுகிறது.
முந்திரியானது முந்திரி பழத்திலிருந்து பெறப்படுகிறது. முந்திரி மரமானது பிரேசில் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் தற்சமயம் பல நாடுகளில் முந்திரி பயிரிடப்படுகிறது.
முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும் போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை அதிக அளவில் ஆக்சலேட்டை கொண்டுள்ளன. முந்திரியானது டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் என்கிற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது.
இந்த அமினோ அமிலங்கள் நமது உடல்களுக்கு சில நன்மைகளை செய்கிறது என்றாலும் சிலருக்கு இதனால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
முந்திரி கொத்து, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப் பண்டம். இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள்.
இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக
வெல்லம், சீனி சேர்ப்பார்கள்.வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம்,
மிளகு பொடி செய்து சேர்க்கப்படும்.
ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ தான்.. அதன் நன்மைகள் என்ன?
குமரி முனையும், அதன் அருகில் இருக்கும்
யாழும் விரும்பிச் சமைக்கும் பதார்த்தம் இதோ கிருஷ்ண ஜெயந்தியில்
உங்களுக்காக…
தேவையான பொருட்கள் :
பாசிப்பயிறு – 250 கிராம்
வறுகடலை – 150 கிராம்
பனங்கற்கண்டு – 200 கிராம்
வறுத்த எள்ளு – 50 கிராம்
தேங்காய் துருவல் – 1 மூடி
மைதா மாவு – 250 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
ஏலக்காய் பொடி – சிறிதளவு
சுக்கு பொடி – சிறிதளவு
செய்முறை :
பாசிப்பயிரை தோலுடன் லேசாக வறுத்து, அதை உடைத்து வைத்துக் கொள்ளவும்.
வறுகடலை மற்றும் உடைத்த பாசிப்பயிறு, பனங்கற்கண்டு ஆகிய வற்றை தனித்தனியாக
நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வறுத்து
எடுத்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வறுத்த எள்ளு,
ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி
கெட்டியாக
பிசைந்து, அதை சிறுசிறு உருண்டை களாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
இலவச தையல் இயந்திரம் பெற முழு விவரம் தெரிந்து கொள்ள !
மைதா
மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் இந்த உருண்டை களை நனைத்து
காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து ரெடி.