ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி?





ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி?

ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும்.
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
இப்போது பக்ரீத் ஸ்பெஷலாக நாம் பார்க்கப் போவது ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆந்திரா மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1/2 கிலோ 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

தக்காளி - 1 (நறுக்கியது) 

கொத்தமல்லி - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

வறுத்து அரைப்பதற்கு... 

கசகசா - 1 டீஸ்பூன் 

சோம்பு - 1/2 டீஸ்பூன் 

மிளகு - 4 

மல்லி - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

பட்டை - 1 இன்ச் 

கிராம்பு - 2 

பச்சை ஏலக்காய் - 3 
செய்முறை: 
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் 

மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, அத்துடன் உப்பு, 

மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். 
குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி.
Tags: