இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணவுகள் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் மும்பையில் செய்யப்படும் தக்காளி புலாவ் செம ருசியாக இருக்கும்.
அந்த தக்காளி புலாவ்வை சுவைக்க விரும்பு கிறீர்களா? அப்படி யானால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு அந்த மும்பை ஸ்பெஷல் தக்காளி புலாவ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
ஏனெனில் இங்கு அந்த மும்பை ஸ்பெஷல் தக்காளி புலாவ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பன்னீர் - 1/2 கப் (துண்டுகளாக்கப் பட்டது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் தக்காளி கெட்சப் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, பின் குடை மிளகாய், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை மிதமான தீயில் 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அடுத்து, அதில் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டி, பின் கொத்த மல்லியைத் தூவினால், மும்பை ஸ்பெஷல் தக்காளி புலாவ் ரெடி!
குறிப்பு:
குக்கரில் அரிசியைப் போட்டு வேக வைக்கும் போது, அதில் உள்ள தண்ணீரில் பாதி எலுமிச்சையை பிழிந்தால், சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்றாக இருக்கும்.