அருமையான கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி செய்வது எப்படி?





அருமையான கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி செய்வது எப்படி?

கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். 
கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி
இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன. நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். 
உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.  மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு  நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். 

ஈரல் வீக்கம் குறையும், பத்தியம்  இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. 

கண், முகம், வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். 

அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையில் அளவுக்கு அதிகமாக சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்ப்பது நல்லது.

குறிப்பாக இந்த கீரையை குழந்தைகள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை வராமல் இருப்பதுடன், குழந்தைகளுக்கு பல் வலி ஏற்படாமலும் இருக்கும். 
தேவையான பொருட்கள்: 

கரிசலாங்கண்ணிக் கீரை - 1 கட்டு 

கோதுமை மாவு - 1 கப் 

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் 

சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன் 

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 

தயிர் - 1/5 கப் 

ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் கரிசலாங்கண்ணி கீரையின் இலைகளை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கீரையை போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும். 

பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு பௌலில் அரைத்து வைத்துள்ள கீரை, கோதுமை மாவு, கடலை மாவு, சாம்பார் பவுடர், கரம் மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 
சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி ரெடி!
Tags: