நம் உடலின் மற்ற உறுப்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் நமது கண்களுக்கும் உண்டு. அவற்றின் ஆரோக்கியதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
ஜிங்க் (Zinc) என்னும் கனிமச்சத்து முந்திரியில் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் A சத்தை ரெட்டினாவுக்குக் கடத்த வல்லது.
இது குறைந்த ஒளியிலும் பார்க்க உதவும் திறனாகிய நைட் விஷனை மேம்படுத்தக் கூடியது. பாதாம் பருப்புகளில் உள்ள வைட்டமின் E, ஃபிரி ரேடிக்கல்களால் கண்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
வால் நட்டில் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. இது கண்களின் செல்களை சுற்றியிருக்கும் சவ்வுகளை (membrane) உற்பத்தி செய்யவும், பராமரிக்கவும் உதவுகிறது.
பேரீச்சம் பழத்தில் அதிகளவில் உள்ள வைட்டமின் A சத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலும் அவற்றையும் குணப்படுத்தக் கூடியது.
பிஸ்தா பருப்பில் லூட்டின், ஸியாக்சான்தின் (Zeaxanthin) போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமுள்ளன. இவை கண்களில் கோளாறு உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராகப் போரிட்டு, இயற்கை முறையில் கண்ணைக் காக்க வல்லவை.
ஆப்ரிக்காட்டில் வைட்டமின் A சத்து அதிகளவில் உள்ளது. இது பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. வைட்டமின் குறைபாடுகளால் உண்டாகும் பிரச்னைகளைத் தீர்க்கும்.
காலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கி யமாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வாறும் ஏதேனும் ஒரு கலவை சாதம் செய்ய நினைத்தால், ட்ரை ஃபுரூட் புலாவ் செய்யுங்கள்.
மறைந்திருந்து நம் உடலை தாக்கும் அக்கி !
இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட.
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
பாதாம் - 10
உலர் திராட்சை - 10
முந்திரி - 10
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். மற்றொரு அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின் அதில் அரிசியை கழுவி சேர்த்து 1-2 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் குங்குமப்பூ சேர்த்து 1/2 நிமிடம் கிளறி,
பின் அதில் 3 சூடேற்றிய நீரை ஊற்றி, கலவை யானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதனை மூடி வைத்து, சாதம் வெந்து நீர் வற்றியப் பின் இறக்கினால், ட்ரை ஃபுரூட் புலாவ் ரெடி!