சுவையான முட்டை போண்டா செய்வது எப்படி?





சுவையான முட்டை போண்டா செய்வது எப்படி?

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நீங்கள் கவலைப்படுவதை காட்டிலும், அதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன என்பதனை சிந்தித்துப் பார்த்தால் அதன் நன்மை உங்களுக்கு புரிய வரும். 
சுவையான முட்டை போண்டா செய்வது எப்படி?
முட்டையில் A, D, E, K, B1, B2, B5, B6, B9, B12 ஆகிய ஊட்டச் சத்துக்களும், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற மினரல்களும் உள்ளன. 
இவை யெல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடியவை மற்றும் எலும்புகளை வலுவூட்டக் கூடியவை. ரத்தசோகை போக்குவதற்கு இரும்பு சத்து மிகவும் உதவியாக இருக்கும். 

மஞ்சள் கருவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்திருக்கின்றன. 

அதோடு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக இதிலுள்ள லூடின் என்னும் ஆன்டி - ஆக்சிடண்ட் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. 

முட்டையின் மஞ்சள் கருவில் அமினோ அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. டிரிப்டோபன் மற்றும் டைரோசின் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களும் மிக முக்கியமானவை.

இந்த இரண்டு மூலக்கூறுகளும் உடலில் உள்ள பல்வேறு வகையான பயோ-கெமிக்கல்கள் மூலக்கூறுகளை சிதையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக வீட்டிலேயே சத்தான முறையில் பிடித்த காய்கறிகளை வைத்து போண்டா செய்யலாம்.

இல்லை, அசைவ உணவை விரும்புபவர்கள், முட்டையை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம். இதனை செய்வது மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்: 

முட்டை - 3 (வேக வைத்தது) 

கடலை மாவு - 1 கப் 

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 

பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். 
எண்ணெயானது காய்ந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 

அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை போண்டா ரெடி!
Tags: