தீபாவளி ஸ்பெஷல்.. முந்திரி முறுக்கு செய்வது எப்படி?





தீபாவளி ஸ்பெஷல்.. முந்திரி முறுக்கு செய்வது எப்படி?

நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற நட்ஸ் வகைகளில் நாம் பெரிதும் விரும்பக் கூடியது முந்திரிப் பருப்புகள் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பருப்புகளை பலர் ஸ்நாக்ஸ் போல நேரடியாகவே சாப்பிடுகின்றனர். 
தீபாவளி ஸ்பெஷல்.. முந்திரி முறுக்கு செய்வது எப்படி?
இன்னும் சிலர், இனிப்புகள், இதர சமையல்களில் முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்கின்றனர். தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். 
செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. முந்திரி பருப்புகளை வாங்கும் போது அதன் நிறம் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். 

முந்திரியின் நிறம் கொஞ்சம் மஞ்சளாக இருந்தால் அது போலியாகும். அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் அது ஒரிஜினல் என்று நம்பலாம். முந்திரியின் மீது கரும்புள்ளிகள், துளைகள் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். 

சில சமயம் கெட்டுப் போன பருப்புகளை விற்பனை செய்ய பார்ப்பார்கள். முந்திரி நல்ல வாசம் மிகுந்தது. அதே சமயம், நாம் நுகரும் போது ஆசையை தூண்டுவதாக அமையும். 

அதுவே தரமற்ற முந்திரி பருப்புகளை நுகர்ந்து பார்த்தால் மோசமான வாசம் தென்படலாம். முந்திரி பருப்புகளை சாப்பிடும் போது அது நம் வாயில் ஒட்டாது. 

அதுவே போலியான பருப்புகளை சாப்பிடும் போது அது நம் வாயில் பற்களில் ஒட்டிக் கொள்ளும். தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். 
இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான்.   குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். 
எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள் : 

அரிசி மாவு - 1 கப் 

முந்திரி - 20 

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

செய்முறை: 
முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும். 

வேண்டு மானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 
எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும். 

பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதே போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!
Tags: