கோதுமையில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, அல்வா எனப் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம்.
கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து காரணமாக அது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கண்களில் தெரியும் அறிகுறிகள் !
உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் கோதுமையில் சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும். கோதுமையானது சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சப்பாத்தியாக மட்டுமல்லாமல், கோதுமையில் கஞ்சி, கோதுமையில் உப்புமா, கோதுமையில் தோசை என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்.
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்.
அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும்.
மட்டன் ரோகன் ஜோஷ் செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப்
நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பாதாம் - 4 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!