ஓட்ஸில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்தான பீட்டா குளுகான், ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, பைல் அமிலங்களுடன் இணைந்து, ஹெபாடிக் கொழுப்பு அமிலம் உருவாவதை தடுக்கிறது.
அதிக கொழுப்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள், ஒட்ஸ் உணவை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஓட்ஸ் உணவில் உள்ள பீனால் பகுதி பொருளான அவினான்திரமைட்ஸ், வீக்கத்தை தடுக்க வல்லது.
மேலும் இது ஆன்டி ஆக்சிடெண்ட், ஆன்டி எதிரோஸ்கிளியோரடிக் பண்புகள் நிறைந்துள்ளன. ஓட்ஸை முழுவதுமாக உட்கொள்ளும் போதே, முழுப்பயன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் 6.6 சதவீதம் மக்கள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் டைப் 2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களே அதிகளவில் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரிவிகித உணவு இல்லாதது, குறைவான உடல் உழைப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்,
உடற்பயிற்சி செய்யாதிருத்தல், நார்ச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களி லானாலேயே, நீரிழிவு விகிதம் அதிகரித்து வருகிறது.
ஓட்ஸ் உணவை அதிகளவில் உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. சத்தான ஓட்ஸில் கஞ்சி மட்டுமே குடித்து அலுத்துப் போனவரா நீங்கள்? இதோ ஓட்ஸில் சுவையான பிரியாணி செய்ய எளிமையான குறிப்புகள். செய்து பாருங்கள்!
சங்குகளின் கூடுகளுக்குள் உயிர் வாழும் சந்நியாசி நண்டு !
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 150 கி
பட்டாணி – 50 கி
கேரட் – 50 கி
பீன்ஸ் – 50 கி
தக்காளி – 2
பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
ஏலக்காய் – சிறிதளவு
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரிஞ்சி இலை – 1
இஞ்சி – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 50 மிலி
நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:
உப்பை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும். இந்நீரை ஓட்ஸ்ஸில் தெளித்து அவித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் இஞ்சி விழுது சேர்த்து அது வதங்கியவுடன் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நீரும் உப்பும் சேர்த்து வேக விடவும். கிரேவி கெட்டியாகும் வரை வதக்கி பின்னர் அவித்த ஓட்ஸை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்
கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம். சூடாக சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். டிபன் பாக்ஸிற்கு உகந்த பதார்த்தம் இது.