வாழைக்காயில் உள்ள நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. குடலை சுத்தப்படுத்துவது முதல் புற்றுநோய் தடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளையும் இந்த வாழை சரி செய்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க செய்ய இந்த வாழை உதவுகிறது.. இதய ஆரோக்கியத்திற்கும், மூளையின் செயல்பாடு களுக்கும் நல்லது.
அதே போல, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுப்பதுடன், கொழுப்பு செல்களை அழிப்பதிலும் வாழைக்காய்க்கு நிறைய பங்குண்டு.
பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது இந்த வாழைக்காய்.
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் சாப்பிட வேண்டும்.
நம்முடைய எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான பண்புகள் இந்த வாழைக்காயில் உள்ளன.. வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் என சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள் பலம் பெறுகின்றன..
மேலும், மூட்டு வலி உட்பட எலும்பு சம்பந்தமான பிரச்சனை களிலிருந்தும் காப்பாற்றுகிறது.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2கப்
காலிஃப்ளவர் – 2கப்
பட்டாணி – 2கப்
ஃப்ரெஞ்சு பீன்ஸ் – 2கப்
தக்காளி – மூன்று
தக்காளி விழுது – இரண்டு மேஜைக் கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
கார்ன்ஃப்ளவர் மாவு – இரண்டு தேக்கரண்டி
முந்திரி விழுது – இரண்டு மேஜைக் கரண்டி
நசுக்கிய மிளகு ஐந்து லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு காய்ந்த
மிளகாய் – மூன்று
வெண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மிளகு,
லவங்கம், ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் தக்காளியை சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். இதற்கிடையில் காய்கறிகளை தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும்.
வதக்கிய தக்காளியுடன் அரைத்த தக்காளி விழுது, வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும். இத்துடன் கார்ன்ஃபிளவர் மாவை தேங்காய் பாலில் கரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு முந்திரி விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும். இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.