உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வில் தற்போது உணவில் தான் அதிக மாற்றம் உண்டாகியுள்ளது. அன்றாட உணவில் அரிசி, கோதுமை உணவுகளை தாண்டி சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. வரகு அரிசி சிறுதானியங்களை போன்று சிறிய விதை பகுதி தான்.
பொதுவாக அரிசி வகைகளை பாலீஷ் செய்யும் போது அதில் இருக்கும் பி- காம்ப்ளஸ் பெருமளவு வெளியேறிவிடும். அதனால் நமக்கு அரிசியில் இருந்து அதிக அளவு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது.
இந்த மாவுச்சத்து தான் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்பாக உடலில் மாற்றப்படும் போது ரத்த அடர்த்தி இதயத்தை பாதிக்க செய்கிறது. பழங்கால மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று வரகரிசி.
அதனை பற்றி இன்றைய கால மக்களில் பலர் தெரிந்திருக்க மாட்டார்கள். இந்த வரகரிசி சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதில் அனேக சத்துக்கள் உள்ளன.
இதனை எப்படி செய்வதென்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இந்த அரிசியை வைத்து தக்காளி சாதம் செய்யலாம் என்றால் நீங்கள் வேண்டாம் என்றா சொல்வீர்கள்.
இதனை எப்படி செய்வதென்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இந்த அரிசியை வைத்து தக்காளி சாதம் செய்யலாம் என்றால் நீங்கள் வேண்டாம் என்றா சொல்வீர்கள்.
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1/2 கப் தக்காளி - 2 (அரைத்தது)
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வரகரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !
பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி..