பீட்ரூட்டை மற்ற சமயங்களில் சாப்பிடுவதை விடவும் குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்பது நமக்குத் தெரியும்.
இநத பீட்ரூட் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும். எந்தெந்த பிரச்சினைகளை இது சரிசெய்யும்.
சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.
மாதத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வதால் உடல் உறுப்புகள் சுத்தமடையும்.
பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சுவையும் கூடும். பச்சையாக பீட்ரூட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கியும் அதில் எலுமிச்சை சாறில் தொட்டும் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் குழந்தை பீட்ரூட் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள்.
அதிலும் பள்ளி செல்லும் போது செய்து டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்தால், மதியம் குழந்தைகள் பசியுடன் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பீட்ரூட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்த மல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
பற்களை பாதுகாப்பது அவசியம் !
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
முதலில் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப் பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட்
மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைத்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைத்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
உடல் பருமன் என்றால் என்ன?
பிறகு அதில் பீட்ரூட் மற்றும் பட்டாணி சேர்த்து குறைவான தீயிலேயே 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் அரிசியைப் போட்டு நன்கு பிரட்டி, பின் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, கொத்த மல்லியைத் தூவினால், பீட்ரூட் புலாவ் ரெடி!