கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. மோனோ சாச்சுரேடட் கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரால் போன்றவை கெட்டது.
ஆலிவ் எண்ணெய் இந்த நல்ல கொழுப்பை நமக்கு அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து பயன் படுத்த, நமது இளமை நீட்டிக்கப்படும்.
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது..இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.
கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தி லுமிருக்கும்.
இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச் சத்துக்களும் அடங்கி யுள்ளன.
ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்..
ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சு லேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது
கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரை கிளிசரைட்ஸ் போன்றவை களையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.
ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப் படுகின்றன.
திரவத் தங்கம்..
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்ட மின்களும், தாது உப்புகளும் அடங்கி யுள்ளன.
ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத் தங்கம் என்று மதிக்கப் படுகிறது. உடல் நல நன்மைகள்...
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போ டெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப் படுகிறது.
மூன்று அடுக்கும் சீராக பணி புரிந்தால் தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவு வதில்லை.
அதனால் தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன் படுத்தினாலும் பூரண பலன் கிடைப் பதில்லை.
சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச் சியுடனும் மினு மினுப்புடனும் திகழச் செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகை தான் ஆலிவ்.
சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச் சியுடனும் மினு மினுப்புடனும் திகழச் செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகை தான் ஆலிவ்.
ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக் கொட்டைகளே ஆலிவ் விதை.
இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்து வத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்து வத்திலும் அழைக்கப் படுகிறது.
இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்து வத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்து வத்திலும் அழைக்கப் படுகிறது.
தோலினை மினு மினுப்பாக்கும்..
இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழு வழுப்பாகவும் வைத்தி ருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.
குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம்.
குழந்தைகளு க்கும் குளிப்பாட்ட லாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.
குழந்தைகளு க்கும் குளிப்பாட்ட லாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.
ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும்
தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும்.
ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம்.
ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம். மார்பகப் புற்று நோயைத் தடுக்கும்...
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்று நோயை வராமல் தடுப்பதுடன்,
மார்பகப் புற்று நோய் இருப்பவர்களுக்கு குணப் படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப் பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப் பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்று நோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோ கிக்கலாம். இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்...
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்று நோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வு நடத்தினர்.
மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.
மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.
அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக் கூடிய மற்ற புற்று நோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன் படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கலாம் என்றார்.
உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர். ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில்,
உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர். ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில்,
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்று நோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத் தான் (Oilve Oil) சொல்ல வேண்டும்.
உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய் தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
அது மட்டுமல்ல.....
கேன்சர், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது. ஆலிவ் ஆயில் அல்சர், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். மூளை, எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும்.
ஆலிவ் ஆயில் வைட்டமின் ஏ.சி, ஈ போலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும், கூந்தல் மிளிரும்
சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது
ஆரஞ்சுப் பழச்சாற்றில்
ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலு வளிப்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டுக் கலக்கி, தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்புக்கள் தீரும்.
ஆலிவ் எண்ணெயில் கருஞ் சீரகத்தைப் பொடி செய்து போட்டு, அதை முகம் முழுவதும் தடவி,பத்து நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், முகம் அழகு பெறும்.
ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்ணின் கீழ் பூசி வர கருவளையம் மறையும்.
தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஞ் செய்து, ஊறிய பின் குளித்தாள், முடி உதிர்வது நிற்கும்.
கைகள் சொர சொரப்பாக, பார்ப்பதற்கு அழகற்றுக் காணப் படுகின்றதா? ஆலிவ் எண்ணெய்யுடன், சிறிது பொடி உப்பைக் கலந்து கைகளில் நன்கு தேய்த்தால், கைகள் மென்மை பெறும்.
ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலு வளிப்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.