கண் பார்வையை கொடுக்கும் சத்துக்கள் நிரைந்த கேரட் !





கண் பார்வையை கொடுக்கும் சத்துக்கள் நிரைந்த கேரட் !

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.
கண் பார்வைக்கு கேரட்
கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.  அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. 

வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

விட்டமின் - A சத்துக்கள் 21% உள்ளது. விட்டமின் கே 10% உள்ளது.

விட்டமின் சி 6% உள்ளது.

கால்சியம் 2% உள்ளது. 

கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் : 

கண் பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது. உடல் செல்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
தோலை பளபளப்பாக வைத்துக் கொள்ள கேரட் உதவும். நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக் காகவும் கேரட் பயன்படுகிறது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக் கூடியது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு. சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடு பவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.
Tags: