தேங்காய் மற்றும் வாழைப்பழம் !





தேங்காய் மற்றும் வாழைப்பழம் !

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
தேங்காய் மற்றும் வாழைப்பழம்
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். 

தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைகிறது. 

காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படுகிறது.காலையில் சுக்குப் பொடி, கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்த சுக்கு வெந்நீர்.
(வீட்டருகே கிடைக்கும் துளசி, அருகம்புல், புதினா இலை, கொத்த மல்லி இலை ஆகிய வற்றையும் விருப்பம் போல் போட்டு கொதிக்க வைக்கலாம்) காலை உணவாக தேங்காயுடன் வாழைப் பழங்கள். 

அரைமூடி தேங்காய் இரண்டு வாழைப் பழங்கள். மூட்டு வலி‍ அல்லது முதுகு வலி உள்ளவர்கள் தேங்காயுடன் பேரிச்சம்பழம் உண்ணலாம். 

பதினோரு மணிக்கு தேன் கலந்த எலுமிச்சைச் சாறு. அல்லது இளநீர். மதிய உணவாக தேங்காய்ப்பூ, வெல்லம் சேர்த்து ஊறவைத்த அவல்.

(அவல் இயற்கை உணவு அல்ல என்றாலும் மதிய உணவு சற்று வயிறு நிரம்ப இருந்தால் தான் சிலருக்கு பிடிக்கும்). அல்லது பருவத்திற்கேற்ற பழங்கள். விலை குறைவாகவும் இருக்கும், சத்தானதாகவும் இருக்கும்.

மாலை 5 மணிக்கு பீட்ரூட், கேரட், வெள்ளைப் பூசணி, சிறிது புடலங்காய், தேங்காய், இவற்றைத் துருவி மிளகு சேர்த்து (உப்பு வேண்டாம்) உண்ணலாம்.

அல்லது காய்கறிகளை வேக வைத்து ஒரு சாறு (சூப். இது இயற்கை உணவல்ல என்றாலும் மாலையில் தேனீர் குடித்தே பழக்கப்ப்டட நமது நண்பர்களுக்காக சிறப்புத் தள்ளுபடி)

இரவு உணவாக பப்பாளி, மாதுளை, ஆரஞ்சு (இப்பொழுது பருவ காலம் எனவே விலை குறைவு), வாழைப் பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒரே கனியை உண்ணலாம்.

காலை முதல் இரவு வரை, எல்லோருக்கும் பொதுவான உணவு என்பது தேங்காயும் வாழைப் பழங்களும் தான்.
சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !
பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? அப்படியே அசந்துடுவீங்க. அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது. 

வாழைப் பழங்களில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக இருக்கிறது. 

இதைத்தவிர, கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் இப்படி எல்லா சத்துக்களும் வாழைப்பழத்தில் இருக்கின்றன. 

1 கிராம் பச்சை வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்களும் இதில் உள்ளதால், உடல் சுறுசுறுப்படையும்.

எல்லா வகை வாழைப்பழங்களை போலவே ரஸ்தாளியிலும் சத்துக்கள் உள்ளன.. கைக்குழந்தைகளை விட, வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். 
ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம். ஏனென்றால், மந்த தன்மையை தந்து விடுமாம். 

அதனால், வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். 
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள் !
ஆனால், ரஸ்தாளியைவிட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தவை பச்சை வாழைப்பழம்.
Tags: