பரோட்டா அல்லது புரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது.
இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப் படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக் குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின.
பரோட்டாவும் பிரபலமடைந்தது. மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம். இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன.
பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன.
தேவையான பொருள்கள் :
எலுமில்லாத கோழி கறி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கோதுமை மாவு - முக்கால் பாகம்
மைதா மாவு - கால் பாகம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
மஞ்சள் தூள்
உப்பு
செய்முறை :
மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்த மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
இதில் தூள் வகைகளைச் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும். தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வதக்கி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும்.
அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விட்டு தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். சுவையான சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா தயார்.
குறிப்பு :
இதில் மைதா அவசியமில்லை. கோதுமையை மட்டும் பயன் படுத்தலாம். கொஞ்சம் சாஃப்ட்னஸ் கிடைப்பதற் காக தேவை யென்றால் மைதா சேர்க்கலாம்.
விட்டு போகாமல் இருக்கும். இதில் வெறும் வேக வைத்த சிக்கனுக்கு பதிலாக சிக்கன் ஃப்ரை, தந்தூரி சிக்கன் போன்றவையும் உதிர்த்து சேர்க்கலாம்.
அப்படி சேர்க்கும் போது மசாலா அவற்றுக்கு ஏற்றபடி மாற்ற வேண்டி வரும். இரண்டு சப்பாத்தியாக செய்யாமல் வழக்கமான ஸ்டஃப்டு சப்பாத்தி போல் உள்ளே வைத்து மூடி மீண்டும் தேய்த்தும் செய்யலாம்.
இப்படி இரண்டாக வைப்பதால் உள்ளே அதிக அளவு கறி வைத்து திக்காக செய்ய இயலும். ஒன்று செய்தாலே லன்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விட போதுமானதாக இருக்கும்.
வேக வைக்காமல் நேரடியாகவும் சிக்கன் சேர்க்கலாம். சேர்த்த பின் வேக விடலாம். இன்னும் சுவை கூட்ட சிக்கன் வெந்ததும் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றலாம்.