தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !





தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

முருங்கைக்காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய், இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. 
தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

இது சூடு என்பதால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக் காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.

இதனை நெய் சேர்த்து சமைப்பது நல்லது. சாதாரணமாக எல்லா வீட்டுக் தோட்டங் களிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூற வேண்டும்.

எண்ணற்ற வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தை விதையி லிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம். இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். 

அந்த வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடிய தாகவும் வளரும்.
முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின், அனைத்துமே பயன்படுகின்றன. முருங்கைப் பட்டையை நீர் விட்டு, அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாக்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.
தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்டால், கை, கால், உடம்பு வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும்.

தோல் வியாதிகள் தீரும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள். வட நாட்டிலும் முருங்கைக் காயை பயன்படுத்து கின்றனர். 
கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக் கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

முருங்கைக் காயை வேகவைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு கிளாஸ் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது. 

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ, அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலரும் மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே. 

முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படை யானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது?

கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?

எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமை யாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இது தவிர இதில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. உடம்புக்கு சக்தி தருகிறது.
தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

தோல், சதை, ஜவ்வு முதலியவை களின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசிய மானதாக உள்ளது.

கூந்தலுக்கு குளிர்கால ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே புரோட்டின் சத்து என்பது உடம்பிற்கு தினமும் தேவைப்படும். ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவை களில் இருக்கும் புரோட்டின் சிறந்ததாகும். வளரும் குழந்தைகளுக்கு பாலும், முட்டையும் சிறந்த உணவாக இருக்கும்.
Tags: